குட்டி அழகே!

அடடே... என் குட்டி அழகே!

நீ பெண் பிள்ளை  என்று சிலர்...
நீ ஆண் பிள்ளை  என்று பலர்...
எனக்கோ நீ எங்கள் பிள்ளை ஆயிற்றே! 
இதில் ஆண் என்ன! பெண் என்ன!!

முதல் மூன்று மாதங்களில் உண்டா இல்லையா என்று
எப்படி அலைக்கழிக்க வைத்தாய்!

விளம்பரங்களில் வீடியோக்களில் எல்லாம் உறுதி செய்யும்
அந்த சிறு கிட்-டை கூட ஏமாற்றிய குறும்பு அல்லவா நீ!

திருமணம் முடிந்ததிலேயே சந்தேகம் தீராத உன் அம்மா அப்பா-விற்கு
உன் வருகைக்கு ஒரு வழியாக க்ரீன் சிக்னல் கிடைத்தது!

 முதல் முறையாக ஸ்கேனில் உன் வளர்ந்து வரும் தோற்றம் கண்டு அதிசயித்து போனோம்...

எங்கள் குட்டி உலகமாகிய உன் இருதய ஒளி கேட்டு எங்கள் இருதயம் துடிக்க மறந்து கண்கள் கூடே நீர்த்து போனது!

ஐந்து மாதங்கள் கடந்த பின்னரும் கூட
என் குட்டி தொப்பைக்குள் இருந்து கொண்டு இன்னமும் கண்ணாமூச்சி காட்டினாய்!

அவ்வப்போது வரும் வாந்தி மயக்கம் கொண்டு என்னை நானே உறுதி செய்து கொண்டேன்... ஆம் நான் உன்னை சுமக்கிறேன் என்று!!

ஏழு மாதங்கள் கடந்து வயிற்றில் உன் அசைவை சரியாக நாங்கள் உணர்ந்த போது,
ஆகா!  அதை வர்ணிக்க வார்த்தைகள் தான் ஏது?

எத்தனை ஆட்டம் காட்டினாய்... "வெளியே வா இரண்டு வைக்கிறோம்" என்ற எங்களை மெய் சிலிர்க்க வைத்தது ஸ்கேனில் தெரிந்த உன் சிறு சிறு அசைவு!!!

உடலில் வலியை விட உடல் உருவ மாற்றம் கண்டு அழும் என்னை சமாதானம் செய்வதே உன் அப்பாவின் தலையாய கடமை!

ஒன்பது மாதங்கள் கடந்த பிறகு தான் என் வயிற்றில் நீ இருப்பதன் தடம் நன்றாக தெரிய ஆரம்பித்தது!

அப்போதே யார் கண்ணும் பட்டுவிட கூடாதென துப்பட்டாவின் துணையை நாடினேன்!

அது இது என ஏகப்பட்ட 
குழப்பங்கள், 
கணிப்புகள்,
உணவு முறை மாற்றங்கள்,
மாத்திரைகள்,
மன அழுத்தங்கள்...

இதை எல்லாம் தாண்டி
ஜடை தைத்தல் 
பூச்சூட்டல் 
சீமந்த வளைகாப்பு என 
பூவும்
வளையலும்
ஆசியும்
சந்தோஷமும்
நிறைய

உன்
தாத்தாக்கள்
பாட்டிகள்
நால்வரின் 
ஆசியோடு
உன்
தந்தையின்
கணிவான காதலோடு
உன் வரவுக்கு காத்திருக்கும்
உன்
அம்மாவின் சிறு பதிவு இது!

அடடே... என் குட்டி அழகே!

Comments

Post a Comment

Popular posts from this blog

அம்மா !!!

நல்விடியல்

பெண்ணே

தங்கையின் மடல்

தனிமையின் தேடல்

அப்பா

மழை

வைக்கம் வீரர்

இல்லை