அப்பா

ஒரு பெண்ணாய்  என் வாழ்வின் முதல் ஆண்மகனே
சிறு வயதில் உம்  தோளை நாற்காலியாக்கி,
அதில் என்னை இளவரசியாக்கி...
நோய் உம்மை  சூழ்ந்த  போதும்,
விதி  உம்மை   ஆண்ட  போதும்,
ஓயாமல் எனக்காக  உழைத்து...
எனைக்காணும் அந்நொடியில் புன்னகை பூத்து...
என் ஐவிரல் பிடியில் ஒற்றை விரலால் காவலனாகி...
தோளுக்கு மேல் வளர்ந்த பின்னும்
தோழனாய் தோள் கொடுத்து...
என் காகிதக் கிறுக்கலில் ஓவியத்தையும்,
என் அரைகுறை சமையலில் அறுசுவையையும்,
அறிந்து ...
எனக்காக வாழ்பவர்
தாமே...அப்பா !


                                                   இப்படிக்கு,
                                         உமது  அன்பு மகள்.    

Comments

Popular posts from this blog

அம்மா !!!

நல்விடியல்

குட்டி அழகே!

பெண்ணே

தங்கையின் மடல்

தனிமையின் தேடல்

மழை

வைக்கம் வீரர்

இல்லை