நல்விடியல்

கலக்கம் கொண்ட மனது
சிறு தனிமைக்கும் வாடுமே...
தனிமை தீண்டும் போதெல்லாம்
வார்த்தைகள் தடுமாறுமே...
வார்த்தைகள் தடுமாறும் போதெல்லாம்
மௌனத்தின் நிழலாடுமே...
மௌனத்தின் நிழல் படியும் போதெல்லாம்
கண்களும் வியர்வையால் துளிர்க்குமே...
கண்கள் நீரில் துளிர்க்கையில்
கனவுகள் கேள்வி ஆகுமே...
கனவுகள் கலையும்  போதெல்லாம்
மனதினில் வெற்றிடம் தோன்றுமே...
மனது வெற்றிடம்  ஆகுகையில்
தமை தாங்கும் தோளை தேடுமே...
தமை தாங்கும் தோளும் கிடைக்கையில்
நம்பிக்கை வேரை ஊன்றுமே...
நம்பிக்கை நெஞ்சில் துளிர்க்கையில்
நல்ல விடியல் நாளை பிறக்குமே...

                                                                          என்றும் அன்புடன், 
                                                                                       நான்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அம்மா !!!

குட்டி அழகே!

பெண்ணே

தங்கையின் மடல்

தனிமையின் தேடல்

அப்பா

மழை

வைக்கம் வீரர்

இல்லை