முகம்
காணும் கனவினில் நீ!
தினம் பூக்கும் பூவிலும் நீ!!
உன்னுடன் என்றென்றும் இருக்க
ஏங்கியே தவிக்கிறேன்!
காணாத உன் முகம் காண
உறக்கத்திலும் புரளுகிறேன்!!
நேரினில் உன் முகம் பூப்பாயா!
என்னுடன் உன் கை கோர்ப்பாயா!!!
-ஏக்கதில் நான்.
இந்த வரிகளை படிக்கும் போது எனக்கு மனதில் தோன்றியது திருவள்ளுவர்.
ReplyDeleteஅவர் முகத்தை பற்றி அருமையாக சொல்லியிருப்பார்
"அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்."
அதே போல் நீங்களும் முகத்தைப் பற்றி அருமையாக சொன்னீர்...
திருக்குறளுக்கு இணையானது ஏதுமில்லை... அதில் உதாரணம் கூறி வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரா
Delete