வெற்றிடம்
இயற்கை எழிலுடன் அழைப்பினும்,
அதை
காண மறுத்தது கண்கள்!
பறவைகள் பாடி பறப்பினும்,
அதை
கேட்க மறுத்தது செவிகள்!
பாதைகள் பரவி கிடப்பினும்,
அதில்
செல்ல மறுத்தது கால்கள்!
வளவிகள் வளைந்து கொடுப்பினும்,
அதை
அணிந்திட மறுத்தது கைகள்!
வார்த்தைகள் ஆயிரம் பொங்கினும்,
அதை
பேசிட மறுத்தது இதழ்கள்!
பூக்கள் பூத்து குலுங்கினும்,
அதை
சூடிட மறுத்தது கூந்தல்!
எல்லாம் எங்கும் இருப்பினும்,
அதில்
வெற்றிடம் கண்டது நெஞ்சம்!
எங்கோ ஒளிச்சுடர் கண்டதும்!
அதில்
மாற்றம் கொண்டது மனது!!!
எனக்காய் தோன்றிய வேகம்!
அதை
பற்றிக் கொண்டது தேகம்!!!
உள்ளுக்குள் ஒருவித ஓட்டம்!
அதில்
ஊக்கம் கொண்டது உள்ளம்!!!
இத்தனை போர்களும் மூளும்!
அதை
வென்றே முயன்றிட வேண்டும்!!!
தரமாய் தடைகளும் தோன்றும்!
அதை
தகர்த்தே தொடர்ந்திட வேண்டும்!!!
- ச. பவானி.
Comments
Post a Comment