கனவு... 2020
அன்று!
சொந்த பந்தங்கள் ஊர் சூழ,
வந்த விருந்தினர்கள் வாழ்த்துரைக்க வண்ணமயமாய் கொண்டாடிய விழாக்கள்...
இன்று!
வீடியோ பதிவுகளாய் வீடு தேடி வருவதை கண்டு
மனம் வதைகிறது!!!
கண்ணுக்கும் புலப்படாமல்,
எம்மருந்துக்கும் அடிபணியாமல்,
எங்கெங்கோ ஓடிக்கொண்டிருந்த
ஒவ்வொருவரையும்,
ஒன்றாய் ஒடுக்கி
ஓய்வெடுக்கவைத்த உன்னை....
கொல்லவும் முடியாமல்,
வெல்லவும் முடியாமல்,
மானுடம் தவிக்கிறது!!!
சின்னஞ்சிறு செயலுக்கெல்லாம்,
சற்றே சீண்டி சண்டையிட்டு,
சிலாகித்த என் உறவுகளையும்...
காலம் நேரம் என தடைபடாமல்,
கள்ளம் கபடம் என தடம்மாறாமல்,
கஷ்டம் முதல் இஷ்டம் வரை!
கடமை முதல் மடமை வரை!
கண்ணீர் முதல் கலக்கம் வரை!
கைகோர்த்து என்னோடு பயணித்த... என் உணர்வுகளால் ஒன்றிணைந்த உறவுகளையும்...
மாதம் ஒருமுறையோ,
ஆண்டுக்கு இருமுறையோ,
சந்திக்கும் சந்தர்ப்பமும் தொலைந்து...
எல்லாம் விதி என நினைக்கையில்... சிலர் முகம் கனவுகளில் கலந்தாடுதே...
தொழில்நுட்ப உரையாடல் உம் முகம் காட்டினாலும்!
அது உணர்த்தாத உம் ஸ்பரிசம் என் நினைவினில் நிழலாடுதே...
மாற்றம் காண மனிதமும்
ஏற்றம் காண இவ்வுலகமும்
ஏக்கத்தோடு யத்தனிக்கையில்,
நானும் பழகினேன்; இந்த இயற்கையின் பாதையில்!...
இப்படிக்கு,
ச. பவானி.
Nice👌
ReplyDeleteஇயற்கையின் நீதியில் தான் நாம் பயணிக்க வேண்டும்...
ReplyDeleteஅருமையாக சொன்னீர்...
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஎல்லாம் உலக நன்மைக்கே ஒவ்வொரு இயற்கை பேரழிவும் மக்களுக்கு கருத்தை பதிவு செய்வதற்கே.....
Deleteஅனைவரும் சமம்....
Nice lines .keep doing
ReplyDelete