சாலை விதிமுறை பற்றிய சிறார் பாடல்
அம்மா அப்பா வாருங்கள்!
நான் கூறுவதை கேளுங்கள்!
சாலையில் நாமும் நடக்கையில்,
சிறுவன் என்கை உம்பிடியில்!
நடைபாதை - தனில் நடக்கனும்!
வேகமாய் ஓடுதல் தவிர்க்கனும்!!
வலப்புறம் சாலையில் நடக்கணும்!
இடப்புறம் வண்டியில் பயணிக்கனும்!
சிகப்பு மஞ்சள் பச்சை விளக்கு,
சரியாய் அதையும் கவனிக்கனும்!
சிகப்பு எறிந்தால் நிறுத்திடனும்!
வெள்ளை வரிக்குப்பின் நின்றிடனும்!
மஞ்சள் எறிந்தால் விழித்திடனும்!
முறையாய் அனைத்தயும் கவனிக்கனும்!!
பச்சை எறிந்தால் புறப்படனும்!
வேகத்தில் அளவும் இருந்திடனும்!!
சாலை விதிகளை மதித்திடனும்!
இல்லையேல் நாம்தான் வருந்திடனும்!!
- ச.பவானி.
Nice...
ReplyDeleteThank you so much
Delete