தங்கையின் மடல்
எழுந்திரு தமையா...
இவ்விடியல் உமக்காக!
முயன்றிடு தமையா...
எவ்வெற்றியும் உமக்காக!
கண்கள் கானா கனவுகள் இல்லை,
அவை ஏனோ இன்றேனும் மெய்ப்படவில்லை!
காயப்படுத்தாத பந்தங்கள் இல்லை,
அதில் உடைந்து சோர்ந்ததும் இல்லை!
மனதில் ஏக்கங்கள் இல்லாமல் இல்லை,
அவை இல்லை என்றால் மனிதனே இல்லை!
கண்ட மாற்றங்கள் பலவாயினும்,
கொண்ட பாடங்கள் நிறைவாகட்டும்!
விழுந்த நேரங்கள் விரயமாயினும்,
கடந்த பாதைகள் நேராகட்டும்!
துவண்ட தருணங்கள் அயர்ப்பாயினும்,
தளராத எண்ணங்கள் துணையாகட்டும்!
எழுந்திரு தமையா...
இவ்விடியல் உமக்காக!
முயன்றிடு தமையா...
எவ்வெற்றியும் உமக்காக!
இப்படிக்கு,
அன்புடன் நான்.
This is for all my brothers🤗
ReplyDeleteVery nice Bavani. Keep it up!
ReplyDeleteThank you so much
Delete😍