காலத்தின் கட்டாயம்!
பெண்ணாய் பிறந்ததர்க்கு பெருமிதமே கொண்டாலும்!
பெரும் அச்சமும் உடன் தொற்றிக்கொள்வது ஏனோ?
ஆசையாய் அன்புடன் உன் அரவணைப்பிர்க்காக
ஓடோடி வரும் பிஞ்சுக் குழந்தையின்கண்,
உன் நச்சுப் பார்வையை பதிக்கையில்,
உன் நயவஞ்சக உள்ளம் உறுத்தாமல் நின்றது ஏனோ?
பிறந்து,
ஒரு மாதமே ஆயினும் சரி!
ஒரு வயது ஆயினும் சரி!
ஒரு நூறு வயதாயினும் சரி!
ஒரு நிமிடமேனும் யோசிக்காமல்
உன் கொடிய தீண்டலை பரிசலிக்க
உன் மனம் கொண்ட வக்கிரம் தகுமா?
எங்கே போனது நம் வீரமும் பண்பாடும்?
அன்று,
மணமுடிந்த ஒரு பெண்ணின்
துயில் கலைந்த துரியோதனனின் குத்துயிரை கொலையுயிராய் கொய்ய
பெரும் போரையே மேற்கொண்ட பாரதம் "மகாபாரதம்" ஆயிற்றே!
ஆனால் இன்று,
எத்தனையோ தேவிகள்
கொடும் பாவிகள் சிலரால்,
தன்னுடல் வெறுத்து
தன் இன்னுயிர் மாய்க்கயில்
வெற்று கதைகள் பேசுவதும்
வீணே வேடிக்கை காண்பதும்
முறை தானா?
அன்று,
கவர்ந்து சென்ற சீதையின் மானம் காத்து
தன்னவளை தன்னுடன் அழைக்க
பெரும் படை என சென்று
இராவணனை வென்று
இலங்கையையே எரித்த
ஆண்மகனை பெற்ற தேசம் ஆயிற்றே!
ஆனால் இன்று,
எத்தனை இராவணன்கள் இருந்தாலும் எத்தனை கோதைகளை சீரழித்து கொன்றாலும்
அவனை தீயிட்டு பொசுக்காது
வீணே கைகளை பிசைந்து நிற்பது ஏனோ?
இது தான் காலத்தின் கட்டாயமா?
இப்படிக்கு,
ஆதங்கத்துடன் நான்!
Comments
Post a Comment