அறிவியல்
ஆக்கமும் அறிவியல்... அழிவும் அறிவியல்...
இதற்கிடையில் காப்பதும் அறிவியலே!!!
அறிவியலின் தோற்றம் இன்றே எனில்...
அதில் மெய்மை ஏதும் இல்லையே!
பண்டைய நூல்கள் சிலதும் பார்க்கையில்...
அதன் தொன்மை நன்கு புரியுமே!
சில சமூக பிரச்சனைகள் நேர்கையில்...
அங்கு அறிவியலும் தீர்வை நல்குமே!
பல குற்றம் தன்னை கலையவே...
பன்முக அறிவியல் இங்கு உதவுமே!
நேரும் இறப்பின் விகிதம் குறையவே...
வளரும் தொழில்நுட்ப அறிவியல் உதவுமே!
உறவின் உள்ளம் எங்கும் உணரவே...
இங்கே கைபேசியின் துணையும் உள்ளதே!
சிலரது கால்கள் செயல்பட மறுக்கையில்...
திரு கலாமின் கலனும் உதவுமே!
எல்லையில் காக்கும் வீரரை காக்கவே...
புதுப்புது கருவிகள் உருவம் கொள்ளுதே!
அறிவியல் சுடர் ஒளியாய் ஒளிர்வதும்,
நெருப்பாய் எரிவதும் அவரவர் கையிலே!!!
இப்படிக்கு,
ச.பவானி.
This comment has been removed by the author.
ReplyDeleteGreat.....
ReplyDeleteThanks for your continuous support 🤗
Delete