ஆணும் பெண்ணும் நிகர் எனக் கொள்வோம்!!!
பெண்ணே!!!
மகளாய் தந்தைக்கு தாயாகி!
தங்கையாய் தமையனுடன் உயிராகி!
தமக்கையாய் தம்பிக்கு ஆசானாகி!
தன்னவளாய் என்னவனின் துணையாகி!
தாயாய் மகனுக்கு தோழியாகி!
இன்னும் பலநிலைகள் கொண்டாய்!
எந்நிலையிலும் முயன்றே வென்றாய்!
உழைப்பது என்றும் ஆண்தான் என்றால்,
அதில் சத்தியம் ஏதும் இல்லையே!
பெண்ணும் அங்கே இல்லை என்றால்,
அங்கே சமநிலை தோன்றுவது இல்லையே!
தட்டி தட்டி குனிய வைத்தாலும்,
தட்டிய கைகளை அன்பால் கைத்தடியாக்கி,
வையகமும் தாண்டி விண்ணகம் சென்றாய்!
எட்டா கனியையும் எட்டியே வென்றாய்!
கத்தியை விடக் கூரியது பேனாமுனை என்றால்,
ஆணின் சக்தியை விட வலியது,
என்றும் பெண்ணின் புத்தியே !
தினம் காணும் கணங்கள் கனமாயினும்,
உன் ஞானம் உனக்கு துணையாகுமே!
போற்றும் பெருமகளாய் நீ தினம் உயர,
புதுப்புது சாதனை நீ தினந்தினம் புரிய,
இவ்வையகம் உன்நிலை 'மேல்' எனச் சொல்லும்!
ஆணும் பெண்ணும் நிகர் எனக் கொள்ளும்!
உலகில் உள்ள அணைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் ♥
ReplyDeletesuper ma.. Keep it up
ReplyDeleteFor sure... Ma
DeleteReally very nice happy women's day 🌹
ReplyDeleteThank you so much...
ReplyDeleteபெண்ணும் அங்கே இல்லை என்றால்,
ReplyDeleteஅங்கே சமநிலை தோன்றுவது இல்லையே!.....vazhaka valamudan
வந்தனம் 💐
Delete