அம்மா !!!


உயிரை உருக்கி மெய்யை வருத்தி 
உயிர்மெய்யாய் என்னை உலகில் ஈன்றவள் அம்மா !

அச்சொல்லின் ரீங்காரம் ஒன்று போதுமே
உலகின் உயிர்கள் யாவும் அசையுமே
பேசும் மொழிகள் பலவாயினும்
எவரும் உணரும் மொழி அம்மா !

கருவறையிலே  என் சுமைதன்னில் சுகம் கண்டவள்
உலகறியா என்னிடம் உலவளாவியவள் 
கண்களால் காணாத போதும் என்னையே உலகாய் கொண்டவள்
என் பிஞ்சுக்கால் மிதியின் வலி அறியாதவள் அம்மா !

நான் பிறக்க தான் மறுஜென்மம் கொண்டவள்
என் நலம் காக்க தன்நலம் துறந்தவள்
நான் பசி ஆற தன் பசி மறந்தவள்
என் பிணி கண்டு இறைவனையே ஏசியவள் அம்மா !

நான் நடை பயில கைத்தடியாகி
என் முகம் மலர இசையாகி
நான் வந்த பாதையில் மலராகி
என் வலி ஏற்று தன் வலி மறப்பவள் அம்மா !

நான் போற்றும் முதல் பெண்ணே !
என் வாழ்வின் தேவதையே
நான் கண்ட கனவை தன் கனவாக்கிய
என் தாயே !................யாவும் நீயே !............. அம்மா !

                                                                                                        - பவானி

Comments

Post a Comment

Popular posts from this blog

நல்விடியல்

குட்டி அழகே!

பெண்ணே

தங்கையின் மடல்

தனிமையின் தேடல்

அப்பா

மழை

வைக்கம் வீரர்

இல்லை