Posts

Showing posts from January, 2019

பெண்ணே

பெண்ணே!!! வா... மாலையாய்  மலர்ந்து வா! வரும் தடைகள் பலவாயினும் அவை அனைத்தும் தாண்டி வா! வாழ்க்கையே தடம் புரண்டாலும் அதையும் ஏற்ப்பாய் முயன்று வா! உறவுகள் நிறம் மாறினாலும் உன் நிறம் மாற்றாத நிலவே வா! உன் கனவுகள் களைந்தோடினாலும் நாளைய விடியல் உனக்காக  வா! ஏறும் படிக்கட்டுகள் சரிந்தாலும் மேடு பள்ளங்களை  கடந்தே வா! விரியும் சிறகினை பிடுங்கி எறிந்தாலும் வீசும் தென்றலில் மிதந்தே வா! சூரியன் தன் கதிர்களை மறைத்தாலும் மின்னும் மின்மினிக்கள் மின்னும் வா! அவையாவும்  ஒருவேளை மறைந்தாலும் வரும் பௌர்ணமி உனக்காக வா! என்றேனும் தொடுவாய் சிகரம் மிடுக்காய் முயன்று முன்னேறி வா!!!                                                            அன்புடன்,                                                   ...

அப்பா

ஒரு பெண்ணாய்  என் வாழ்வின் முதல் ஆண்மகனே சிறு வயதில் உம்  தோளை நாற்காலியாக்கி, அதில் என்னை இளவரசியாக்கி... நோய் உம்மை  சூழ்ந்த  போதும், விதி  உம்மை   ஆண்ட  போதும், ஓயாமல் எனக்காக  உழைத்து... எனைக்காணும் அந்நொடியில் புன்னகை பூத்து... என் ஐவிரல் பிடியில் ஒற்றை விரலால் காவலனாகி... தோளுக்கு மேல் வளர்ந்த பின்னும் தோழனாய் தோள் கொடுத்து... என் காகிதக் கிறுக்கலில் ஓவியத்தையும், என் அரைகுறை சமையலில் அறுசுவையையும், அறிந்து ... எனக்காக வாழ்பவர் தாமே ...அப்பா !                                                    இப்படிக்கு,                                          உமது  அன்பு மகள்.    

தனிமையின் தேடல்

இன்று ஏனோ தனிமையில் என் மனம்.... எதை நாடுதோ... எதை தேடுதோ... மனித வாழ்க்கையே புரியாத புதிரல்லவா...! அதன் விடையை எளிதில் கண்டவர் தான் யார்...! நானும் அதற்காகவே முயல்கிறேன்... பதிலோ "கிடைப்பேனா?"  என்கிறது... மனமோ "தேடுவதை விடுவாயோ? " என தவிக்கிறது... விதியோ  "உன்னை விடுவேனோ?" என  நகைக்கிறது... நானோ 'விதியா',  'மதியா' (அ) 'மனமா'  என்ற குழப்பத்தில்... இறுதியில் மனம் சொன்னது "உன் தனிமையை உரித்தாக்கு விதியை உன் மதியால் நெறியாக்கு...."  என அதையே ஏற்றேன்... என்றேனும் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில்...!                  என்றும் அன்புடன்                          பவானி

நல்விடியல்

கலக்கம் கொண்ட மனது சிறு தனிமைக்கும் வாடுமே... தனிமை தீண்டும் போதெல்லாம் வார்த்தைகள் தடுமாறுமே... வார்த்தைகள் தடுமாறும் போதெல்லாம் மௌனத்தின் நிழலாடுமே... மௌனத்தின் நிழல் படியும் போதெல்லாம் கண்களும் வியர்வையால் துளிர்க்குமே... கண்கள் நீரில் துளிர்க்கையில் கனவுகள் கேள்வி ஆகுமே... கனவுகள் கலையும்  போதெல்லாம் மனதினில் வெற்றிடம் தோன்றுமே... மனது வெற்றிடம்  ஆகுகையில் தமை தாங்கும் தோளை தேடுமே... தமை தாங்கும் தோளும் கிடைக்கையில் நம்பிக்கை வேரை ஊன்றுமே... நம்பிக்கை நெஞ்சில் துளிர்க்கையில் நல்ல விடியல் நாளை பிறக்குமே...                                                                           என்றும் அன்புடன்,                                                  ...

அம்மா !!!

உயிரை உருக்கி மெய்யை வருத்தி  உயிர்மெய்யாய் என்னை உலகில் ஈன்றவள் அம்மா ! அச்சொல்லின் ரீங்காரம் ஒன்று போதுமே உலகின் உயிர்கள் யாவும் அசையுமே பேசும் மொழிகள் பலவாயினும் எவரும் உணரும் மொழி அம்மா ! கருவறையிலே  என் சுமைதன்னில் சுகம் கண்டவள் உலகறியா என்னிடம் உலவளாவியவள்  கண்களால் காணாத போதும் என்னையே உலகாய் கொண்டவள் என் பிஞ்சுக்கால் மிதியின் வலி அறியாதவள் அம்மா ! நான் பிறக்க தான் மறுஜென்மம் கொண்டவள் என் நலம் காக்க தன்நலம் துறந்தவள் நான் பசி ஆற தன் பசி மறந்தவள் என் பிணி கண்டு இறைவனையே ஏசியவள் அம்மா ! நான் நடை பயில கைத்தடியாகி என் முகம் மலர இசையாகி நான் வந்த பாதையில் மலராகி என் வலி ஏற்று தன் வலி மறப்பவள் அம்மா ! நான் போற்றும் முதல் பெண்ணே ! என் வாழ்வின் தேவதையே நான் கண்ட கனவை தன் கனவாக்கிய என் தாயே ! ................யாவும் நீயே ! ............. அம்மா !                                                ...