Posts

Showing posts from September, 2024

எங்கே நான்?

எங்கே நான்? என்னையே தொலைத்தது ஏன்? ஊசலாடும் இம்மனநிலை ஏன்? குணங்கெட்டு அலைவதும் ஏன்? எங்கே நான்? உற்றார் உடன் இருந்தும்       யாருமில்லா தனிமை ஏன்? ஊக்குவிக்க என்னவன் இருந்தும்      உள்ளுக்குள் புதையுண்டது ஏன்? மடியினில் மழலை இருந்தும்       மனதினில் கலக்கம் ஏன்? எங்கே நான்? சிரித்த முகம் தொலைத்து     சிடுசிடுக்கும் கண்கள் ஏன்? கற்றது கையளவு ஆயினும்       அதையும் தொலைத்தது ஏன்? தேதி கூட அறியாமல்       நாட்கள் நகர்வது ஏன்? நாட்டம் எதிலும் கொல்லாமல்      இந்த தள்ளாட்டம் ஏன்? எங்கே நான்? மண்டைக்குள் ஆயிரம் உள்ள போதிலும்       எதுவும் நடக்காதது ஏன்? முன்னோக்கிய இலக்குகள் தொலைத்து      பின்னோக்கிய இச்சிந்தனைகள் ஏன்? அனைத்திற்கும் மேலாக பவானியாகிய  நான் காணாமல் போனது ஏன்? இப்படிக்கு, உள்ளுக்குள் தொலைந்துவிட்டவள்.