குட்டி அழகே!
அடடே... என் குட்டி அழகே! நீ பெண் பிள்ளை என்று சிலர்... நீ ஆண் பிள்ளை என்று பலர்... எனக்கோ நீ எங்கள் பிள்ளை ஆயிற்றே! இதில் ஆண் என்ன! பெண் என்ன!! முதல் மூன்று மாதங்களில் உண்டா இல்லையா என்று எப்படி அலைக்கழிக்க வைத்தாய்! விளம்பரங்களில் வீடியோக்களில் எல்லாம் உறுதி செய்யும் அந்த சிறு கிட்-டை கூட ஏமாற்றிய குறும்பு அல்லவா நீ! திருமணம் முடிந்ததிலேயே சந்தேகம் தீராத உன் அம்மா அப்பா-விற்கு உன் வருகைக்கு ஒரு வழியாக க்ரீன் சிக்னல் கிடைத்தது! முதல் முறையாக ஸ்கேனில் உன் வளர்ந்து வரும் தோற்றம் கண்டு அதிசயித்து போனோம்... எங்கள் குட்டி உலகமாகிய உன் இருதய ஒளி கேட்டு எங்கள் இருதயம் துடிக்க மறந்து கண்கள் கூடே நீர்த்து போனது! ஐந்து மாதங்கள் கடந்த பின்னரும் கூட என் குட்டி தொப்பைக்குள் இருந்து கொண்டு இன்னமும் கண்ணாமூச்சி காட்டினாய்! அவ்வப்போது வரும் வாந்தி மயக்கம் கொண்டு என்னை நானே உறுதி செய்து கொண்டேன்... ஆம் நான் உன்னை சுமக்கிறேன் என்று!! ஏழு மாதங்கள் கடந்து வயிற்றில் உன் அசைவை சரியாக நாங்கள் உணர்ந்த போது, ஆகா! அதை வர்ணிக்க வார்த்தைகள் தான் ஏது? எத்தனை ஆட்டம் காட்டினாய்... "வெளிய...