ரக்ஷபந்தன்
நான் செய்யும் யாவும் பொறுத்து எனை வெறுக்காமல், தடுமாற்றம் நிறைந்த இவ்வுலகில் என் தடம் மற்றாமல், நம் ஊனுடல் இரத்தம் வேறாகினும் அதை பாராமல், உன் உடன்பிறவா என்னிடம் சிறிதும் பாகுபாடு காட்டாமல், என்றும் எனக்காக பயணித்து உன் நிறம் மாற்றாமல், என் மனம் நிறைந்த உமக்கு, ரக்ஷபந்தன் வாழ்த்துக்கள் அண்ணா!