Posts

Showing posts from February, 2020

எத்தனை ஆயிரம்!

தோய்ந்திடும் மனதிலே ஏக்கங்கள் ஆயிரம்! அதை தாங்கிடும் நெஞ்சிலே வலிகள் பல்லாயிரம்!!! சுற்றிடும் பூமியில் இருப்பது பல ஆயிரம்! அதில் மனதை வருடிடும் வர்ணங்கள் பல்லாயிரம்!!! பொங்கிடும் கடலிலே எழும் அலைகள் நூறாயிரம்!  அதில் நித்தமும்  நீந்திடும் உயிர்கள் பல்லாயிரம்!!! பரந்திருக்கும் வானத்தில் நட்சத்திரங்கள் எத்தனை ஆயிரம்!  அதில் சீறிட்டு பறந்திடும் பக்ஷிகள் பல்லாயிரம்!!! கொழுந்தெறியும் தீயிலே எரிந்தவை எவையாயினும், அதில் எம்மாந்தரின் மாயையும் மாய்ந்தோடி போகட்டும்!!!                                                          -பவானி