தெரிந்தவர் சாலையில் செல்கையில், அவரது நலம் காண்பதில்லையே! தெரியாதோர் சாலையில் கிடக்கையில், உதவிட யாரும் இல்லையே! விதி விளக்காய் சிலரும் நினைக்கையில், அதனை சுற்றார் விடுவதில்லையே! பணமும் நிறைய இருக்கையில், கொடுக்க மனமும் இல்லையே! கொடுக்க மனம் தான் இருக்கையில், பணம் தான் அங்கு இல்லையே! பணம் தான் என்று சிலர் நினைக்கையில், வாழ்வில் நிம்மதி இல்லையே! இருந்தும் உதவிட நினைக்கயில், இவ்வுலகுக்கு நீதான் இறைவனே!!!